நடிகர் சித்தார்த் நடிப்பை காட்டினும் ட்விட்டரில் பிரபலம். ஆளும் கட்சிக்கு எதிராக முக்கியமாக பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பது, லோக்கடவுன் முதல் முழு நேர தொழிலாகவே கொண்டுள்ளார் என்றும் மக்களால் நம்பப்படும் வண்ணம் நடந்து கொள்கிறார்.

siddharth

பாரதத்தை உலக அரங்கில் பெருமைபடுத்தி, பல பெண் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக (PV சிந்து உட்பட) பலரை விளையாட்டு துறையில் ஊக்கப்படுத்தி சாதனை பெண்ணாக சரித்திரத்தில் உள்ளவர் சைனா நேவால்.

சைனா நேவால் பாரத பிரதமரின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டுவது, தேச பாதுகாப்பிற்கே விரோதமான செயல் என்று அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறினார்.

இதற்கு பதில் தர கிளம்பிய நடிகர் சித்தார்த். உலக ஷாட்டில் காக் வீராங்கனையே என்று குறிப்பிடும் வண்ணம், உலக “சட்டில் காக்” வீராங்கனை என்றார். இதன் பொருள் “வீரியமற்ற ஆண்குறி” என்பதாகும், இவ்வாறு வர்ணித்து தொடர்ந்த அவர், இந்தியாவை காக்க பலர் உள்ளார்கள். உன்னை நினைத்து வெட்கப்படுகிறேன் #Rihanna என்றார்.

ரிஹான்னா இதற்கு முன்னர், விவசாயி புரட்சியை பற்றி பேசலாமா என்று தன் ட்விட்டர் பக்கத்தில் கேட்டவர், அப்பொழுதே சச்சின் உட்பட நிறைய பிரபலங்கள் பாரத பிரச்சனையில் தலையிட வேண்டாம் என்று கூறினார்.

இரண்டையும் சேர்த்து பார்க்கையில், அன்று பேசாத நீ இன்று பேசுகிறாயா, வீரியமற்ற நீங்கள் நாட்டை பாதுகாக்கிறீர்களா என்று தர குறைவற்ற விமர்சனம் செய்துள்ளார்.

தேசிய கீதத்தையும் நாட்டின் பெருமையையும் ஒலிம்பிக் அரங்கில் ஒலிக்க செய்த பெண்ணை, ஒரு நடிகர் இவ்வாறு அசிங்கமான வார்த்தையில் வர்ணிப்பதா என்று தேச அளவில் எதிர்பாலை எழ. நான் கதை சொல்லும் கோழி என்ற அர்த்தத்தில் அவரை வர்ணித்தேன், நீங்கள் யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என்று மழுப்புகிறார்.

Categorized in: