குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி மக்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சி தான் ‘குக் வித் கோமாளி’ தொடர்ந்து இரண்டு சீசன்கள் அடுத்தடுத்து வெளியாகி, ரசிகர்களின் மொத்த ஆதரவையும் பெற்று டி.ஆர்.பி யில் டாப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 வெளிவர உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக பிரமோ வெளியான நிலையில்,
அதில் புகழ் வருவாரா? என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் நிகழ்ச்சி துவக்கத்தில் புகழ் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.
இந்த நிலையில் தான் நடிகரும் இயக்குநருமான மனோபாலா தனது சமூக வலைதள பக்கத்தில் குக் வித் கோமாளி செட்டில் புகழ் உடன் எடுத்த போட்டோவை பகிர்ந்து உள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் புகழ் நிச்சயமாக இந்த வார எபிசோடில் இருப்பார் என செம குஷியில் காத்து இருக்கின்றனர்.
புகழ் அஸ்வின் உடன் என்ன சொல்ல் போகிறாய் படத்தில் நடித்து வெளாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் மேலும் அவர் அஜித்துடன் வலிமை, அருண் விஜய் உடன் யானை என செம பிசியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.