தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நாகினி தொடரை யாரும் அறியாமல் இருக்க முடியாது.

இந்தி சீரியல் தொடர்களை தமிழில் டப் செய்து வெளியிட்டு அதில் பல தமிழ் மக்களின் விருப்பமான தொடராகி டிஆர்பி ஐ அள்ளி கொடுத்து இருக்கிறது.

நாகினி மௌனி ராய்

அதில் நாகினி சீரியல் மிகவும் பிரபலமானது பாம்பு உலகத்தில் இருக்கும் சக்தி வாய்ந்த நாக மணியை கைப்பற்ற நடக்கும் போராட்டம் தான் கதை களம்.

இது வரை நாகினி சீரியல் 5 சீசன்கள் வெற்றிகரமாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்த சீசனும் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாகினி மௌனி ராய்

இதில் மௌனி ராய், அதா கான், அர்ஜுன் பிஜ்லானி, சுதா சந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மெளனி ராய் அழகிற்க்காக ஒரு ரசிகர் கூட்டம் அவர் பின்னால் இருந்த நிலையில் அவர் அடுத்தகட்டமாக சினிமாவில் நுழைந்தார்.

கேஜிஎப், கோல்டு, உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் மெளனி ராய்க்கு கைவசமும் படங்கள் உள்ளன.

நாகினி மௌனி ராய்

இந்த நிலையில், துபாய் தொழில் அதிபரான சுராஜ் நம்பியார் என்பவரை காதலித்து வந்த நாகினி மெளனி ராய் சமீபத்தில் அவரை கரம் பிடித்துள்ளார்.

கேரள முறைப்படி திருமணம் செய்து கொண்ட நாகினி மெளனி ராய் சிராஜ் நம்பியாருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categorized in: