நடிகையும், சின்னத்திரை தொகுப்பாளருமான DD புத்தாண்டை ஒட்டி வீல் சாரில் இருப்பது போல வெளியிட்ட போட்டோ பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது.
தனது பள்ளி பிராயம் முதலே தனது குடும்ப சூழல் காரணமாக நிகழ்ச்சி தொகுப்பாளர், சினிமாவில் சிறு சிறு கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வந்த திவ்யதர்ஷினி.
அவரது கடின உழைப்பால் தொடர்ந்து 20 வருடங்கள் யாரும் தொட முடியாத அளவுக்கு மக்கள் மனதில் பிரபலமும், அன்பையும் பெற்றவர் எனலாம்.
கடந்த கொரானா கால கட்டத்தில் ஊரடங்கின் போது கால் உடைந்த நிலையில் போட்டோ வெளியிட்டார் DD.
இதனை பார்த்து பதறிய ரசிகர்கள் பலரும் அவர் சீக்கிரமாக சிகிச்சை முடிந்து குணமாக வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையில், அவர் புத்தாண்டு நேரத்தில் வெளியிட்ட வீடியோ தான் காண்பவர்கள் மனதை பதற வைத்தது.
துபாயில் புத்தாண்டை கொண்டாட சென்ற டிடி வீல் சாரில் அமர்ந்த படி இருக்க அவரது சகோதரர் அவரை தள்ளி செல்கிறார்.
அதில் இனி நான் நடக்கவே முடியாது என டிடி பதிவு செய்திருந்ததை அடுத்து பலரும் அப்படி என்னாச்சு என்ன கேள்வி கேட்டு வந்தனர்.
இதற்க்கு பதில் அளித்த டிடி தனக்கு கால் மூட்டில் உள்ள பிரச்சனையினால் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும்.
தற்போது எலும்பு பிரச்சனை ஒன்றினால் அதிக தூரம் நடக்க முடியாமல் அவதி கொள்வதாலவும், அதற்க்காக தான் வீல் சேரினை உபயோகிப்பதாகவும் கூறினார்.