நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி அவரது இன்ஸ்டாகிராம் பக்கதில் வெளியிட்ட வீடியோ சர்ச்சையானதை அடுத்து கணவர் நகுல் பதில் கொடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் நகுல் ‘பாய்ஸ்’ படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி பின்னர் உடல் எடையை குறைத்து ஹீரோவாக ‘ காதலில் விழுந்தேன்’ படம் மூலமாக ரீ எண்டிரி கொடுத்தார்.

இந்த படத்தை அடுத்து ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தினார். மேல தமிழ் நடிகை தேவயாணியின் சகோதரர் நகுல்.
இவர் காதலித்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார், அவர்களுக்கு அகிரா என்ற குழந்தையும் உள்ளது.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர் ஸ்ருதி, சமீபத்தில் ஆண் – பெண் உரிமை குறித்து அவர் பேசிய வீடியோவை வெளியிட்டார்.

இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் எதிர்மறையான பல கருத்துகளை பதிவு செய்தும், நகுலுக்கு மெசேஜ் அனுப்பியும் வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் கடுப்பான நகுல், நான் ஒரு பெண்ணிய வாதி தான, என் மனைவியை ஏன் அடக்கி வைக்க வேண்டும் ? என கேள்வி எழுப்பியவர்.
அதிகமான பெண்கள் தான் எனக்கு இப்படி மெசேஜ் செய்திருக்கின்றனர், அது எனக்கு வேதனையாக உள்ளது.
உங்களை இப்படி அடக்கி வைத்தால் ஏற்றுக் கொள்வீர்களா என விலாசி தள்ளிய வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.
[…] பதில் அளித்து முடித்து வைத்த உடனே அடுத்த பிரச்சனையாக […]