முன்னணி தொலைகாட்சி VJ ஆக வலம் வரும் ரம்யா வின் 15 வருடங்களுக்கு முன்பு எடுக்கபட்ட புகைபடம் இணையத்தை கலக்கி வருகிறது.
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் முன்னணி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர் தான் VJ ரம்யா.
இவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் மட்டும் அன்றி, திரைப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்ட ரம்யா சில மாதங்களில் விவாகரத்து செய்தார். இந்த விவகாரம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதன அடுத்து தனது பிட்னஸில் கவனம் செலுத்தி வந்த ரம்மியா அடுத்து வெப் சீரிஸிலும் கமிட்டாகி பிசியாக இருந்து வருகிறார்.
இப்படி பன்முகம் காட்டி கலக்கி வரும் ரம்மியா யூடியூபராகவும் களம் இறங்கினார், அதில் பலருக்கும் பிட்னஸ் டிப்ஸ், டயட் டிப்ஸ் என தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
இந்த நிலையில் தான் சமூக வலைதளத்தில் அதிக ஆக்டிவாக இருந்து வரும் ரம்யா கடந்த 15 வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைபடத்தை பதிவிட்டார்.

அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பப்லி பப்லி ரம்யா என ஆச்சரியத்தில் திளைத்து வருகின்றார்கள்.
மேலும், இவ்ளோ பிட்டாக இருக்கும் ரம்யா கொஞ்சம் கொழுக்கு மொழுக்காக இருப்பதை பார்ப்பது நல்லா இருக்கு எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.