வலிமை படத்தின் முக்கிய புள்ளியின் மகள் ஆளும் அரசின் அமைச்சருக்கு மருமகளாக திருமணம் முடிந்து போகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

தல அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள படம் ‘வலிமை’ அதன் விநியோகஸ்தர் தான் அன்பு செழியன்.

valimai-distributor-financier-gopuram-cinemas-anbuchezhian-daughter-wedding-photos-pictures-stills

சினிமாவில் ‘வானத்தை போல ‘ படம் துவங்கி பல ஹிட் படங்களுக்கு பைனாஸ் செய்தும், வினியோகஸ்தராகவும் இருந்து வருகிறார்.

இவரது மகள் சுஸ்மிதா அவர் அப்பாவின் 25 சினிமா திரை அரங்குகளை நிர்வகித்து வருகிறார். 25 வயதில் இவ்வளவு பெரிய பொறுப்பை நிர்வகித்து மாஸ் காட்டி வருகிறார் சுஸ்மிதா.

சுஸ்மிதாவுக்கும் திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு மைத்துனர் ராஜேந்திரன் என்பவரின் மகன் சரணுக்கும் திருமணம் செய்ய நிச்சயக்க பட்டுள்ளது.

சிவில் தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வரும் ‘சன் அகாடமி’ யின் நிறுவனர் தான் ராஜேந்திரன் அவரது மகனுக்கும், சுஸ்மிதா க்கும் திருமணம் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி வெளியானதை அடுத்து இணையத்தில் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Categorized in: