சினிமா நடிகை ஒருவர் மது பாட்டிலுக்கு விளம்பரம் செய்த வீடியோ ரசிகர்களை செம்ம கடுப்பாக்கியுள்ளது.
சினிமா, சீரியல் என நடிகர் – நடிகைகள் விளம்பரங்களில் நடிப்பது வாடிக்கையான விஷயம் தான் என்றாலும் காசுக்காக தவறான விளம்பரம் செய்ய கூடாது அல்லவா?
அப்படி செய்தால் அது அவர்களுக்கான பிம்பத்தை ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவாக மாற்றிவிட அதிக வாய்ப்புகள் உள்ளது.
திரிஷா, ராய் லட்சுமி , காஜல் அகர்வால் என பல நடிகைகள் பணத்திற்க்காக மது விளம்பரத்தில் நடித்து உள்ளனர்.
ஒரு சிலருக்கு அந்த விளம்பரத்தில் நடித்த காரணத்தினால் பேக் பையரும் ஆனதை யாரும் மறுக்க முடியாது.
அப்படி தான் நடிகை நிதி அகர்வால் அந்த லிஸ்டில் இணைந்து கொண்டார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
மது வகையில் ஒன்றான பிராந்தியை ஒரு கண்ணாடி கோப்பையில் ஊற்றி அதை முகர்ந்து பார்த்தபடி ம்ம்ம்ம்ம், செம்ம என வசனம் நிதி அகர்வால் பேசியுள்ளார்.
இந்த வீடியோ வெளியாகியதை அடுத்து ஒத்த ரோசா பொண்ணை ரொம்ப அழகா வளர்த்துருக்க- னு ரசிகர்கள் பலரும் கடுப்பில் கமெண்ட் செய்துள்ளனர்.
மேலும் புத்தாண்டை முன்னிட்டு பலரும் குடியை நிறுத்த தான் அறிவுரை கூறுவார்கள், ஆனால் நீ என்னம்மா குடிக்க சொல்றன்னு சரமாறி கேள்விகளை எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.