நடிகர் நகுலின் சமூக வலைதள பக்கத்தில் உங்க மனைவி அழகாவே இல்லையே, அவங்க என்ன திருநங்கையா என கேள்வி கேட்ட ரசிகரால் கொதித்து போயுள்ளார் நகுல்.
நடிகர் நகுல் ‘பாய்ஸ்’ படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி பின்னர் உடல் எடையை குறைத்து ஹீரோவாக ‘ காதலில் விழுந்தேன்’ படம் மூலமாக ரீ எண்டிரி கொடுத்தார்.
இந்த படத்தை அடுத்து ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தினார்.மேல தமிழ் நடிகை தேவயாணியின் சகோதரர் நகுல்.
இவர் காதலித்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார், அவர்களுக்கு அகிரா என்ற குழந்தையும் உள்ளது.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர் ஸ்ருதி , சமீபத்தில் ஆண் – பெண் உரிமை குறித்து அவர் பேசிய வீடியோவை வெளியிட்டார்.
இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் எதிர்மறையான பல கருத்துகளை பதிவு செய்தும் , நகுலுக்கு மெசேஜ் அனுப்பியும் வந்துள்ளனர்.
அதற்க்கு பதில் அளித்து முடித்து வைத்த உடனே அடுத்த பிரச்சனையாக நகுலின் மனைவி குறித்து மற்றொரு ரசிகர் அநாகரீகமாக கேள்வி எழுப்பியதால்,
முதலில் என்னை அண்ணா என கூப்பிட உங்களுக்கும் எனக்கும் என்ன ஒற்றுமை இருக்கிறது.
அதிலும் நீ எதையும் சாதிக்க முடியாத வெறுமையானவன். நீ செய்ததற்காக நிச்சயமாக ஒரு நாள் அனுபவிப்பாய்.
அந்த நாளில் உனக்கு புரியும் என நடிகர் நகுல் அந்த ரசிகருக்கு அவர் பாணியிலேயே பதில் கொடுத்து உள்ளார்.