சின்னத்திரை நடிகையும், தொகுப்பாளரும் ஆன நக்ஷத்ரா தனது மாமியாருடன் ‘ஏ சாமி’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது.
பிரபல தொலைகாட்சி யில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான நக்ஷத்ரா நாகேஷ் தனது கடின உழைப்பால் அடுத்த கட்டமாக டிவி சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.

முதலில் லஷ்மி ஸ்டோர் நாடகத்தில் அறிமுகமான நட்சத்திரா தற்போது தமிழும், சரஸ்வதியும் தொடரில் நடித்து வருகிறார்.
தீபக் உடன் நடித்து வரும் நக்ஷத்ரா தனக்கென ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். மேலும் சில குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

இதற்கிடையில் தனது பப்பி லவ் காதலரை அறிமுகம் செய்த நட்சத்திரா பெற்றோர் அனுமதியுடன் சமீபத்தில் தான் காதல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் அவர் தன் மாமியாருடன் புஷ்பா படத்தில் செம்ம பேமஸான ஏ சாமி பாடலுக்கு செம்மையாக ஆடியுள்ளார்.
மேலும் அந்த வீடியோவுக்கு, பையனையும் கொடுத்து, அவர் கையில் போனையும் கொடுத்து பாட்ட போடுன்னு சொல்லி கூட ஆடுற மாமியார் வேற லெவல் என பதிவு போட்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த வீடியோவை செம்மையாக வைரல் ஆக்கி வருகின்றனர். சிலர் ட்ரோலும் செய்றாங்க இருந்தாலும் இக்னோர் நெகட்டிவிட்டி பாஸ்.