நடிகர் விக்ரம் மகன் துருவ் அவருடன் நடித்த நடிகையுடனே துபாயில் டேடிங் செய்யும் வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
அர்ஜுன் ரெட்டி தெலுங்கு பட தமிழ் ரீமேக் படமாக வெளியான ஆதித்ய வர்மா படத்த்கின் மூலமாக அறிமுகமானவர் தான் விக்ரம் மகன் துருவ்.
அது தான் முதல் படம் என்ற உணர்வை படம் முழுக்க எந்த இடத்திலும் தெரியாமல் அற்புதமாக அவர் நடிப்பை வெளிப்படுதியதாக பல பாராட்டுகளைப் பெற்றார்.

மேலும் மாரிசெல்வராஜ் – உதயநிதி ஸ்டாலின் பேனரில் ஒரு படமும், அப்பாவுடன் இணைந்து மகான் என்ற படமும் தற்போது நடித்து வருகிறார் துருவ்.
சமூக வலைதளத்தில் அதிக ஆக்டிவாக இருப்பவர் துருவ், இந்த நிலையில் தான் அவர் இந்த புத்தாண்டை கொண்டாட துபாய் சென்றிருப்பதை இன்ஸ்டாவில் பதிவு போட்டார்.
சரி புத்தாண்டு கொண்டாட்டம் சகஜம் தானே அதுல என்ன இருக்குன்னு கேட்டீங்கனா ? அந்த போட்டோல அவர் கூட இருந்த நடிகைதாங்க விஷயமே.

துருவுடன் ஆதித்ய வர்மா படத்தில் நடித்தவர் பனிதா சந்து அவர் தான் துருவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் வெளியாகி செம்ம வைரல் ஆகிறது.
என்ன துருவ் அதுக்குள்ள காதலா ? இல்ல டேடிங்கா ? என அந்த போட்டோவை பார்த்த பலரும் கேள்விகள் எழுப்ப அமைதி காத்து வருகிறாராம் துருவ்.