பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கனா காணும் காலங்கள் 2 சீசன் துவங்க உள்ளதாக பிரமோ வெளியானது, அதில் வந்த டீச்சர் தான் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
கனா காணும் காலங்கள் கடந்த 2006 ஆம் ஆண்டு பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த காதல், நட்பு, ஆசைகள் என்பதைக் கதை களமாக கொண்டது.
இந்த தொடர் வெளிதாகி சேனலின் டி ஆர் பி எகுற வைத்தது எனலாம். அதனை தொடர்ந்து பல சீசன்கள் வெளியாகின.
கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என பல கதைகள் வந்தாலும் நம்ம 90ஸ் கிட்ஸ்க்கு பிடித்த தொடர் அது தான் என்பது யாரும் மறுக்க முடியாது.
இந்த நிலையில் தான் கனா காணும் காலங்கள் சீசன் 2 தொடர் வெளியாகும் எனவும் அதற்கான டீசரும் வெளிகாகி அதிக வரவேற்பைப் பெற்றது.
அந்த டீசரில் வரும் டீச்சர் தான் தற்போது பேசு பொருளாக மாறிய நிலையில் யார் அந்த டீச்சர் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.
அந்த டீச்சர் வேற யாரும் இல்லங்க, சன்மியூசிக் ஆங்கர் சங்கீதா தான். அவர் பல சீரியல்களில் நெகடிவ் ரோல்களை கலக்கிய வந்தவர்.
மேலும் சன்மியூசிக் கில் இவருக்கென தன ரசிகர்கள் பட்டாளமே உள்ள நிலையில் அவருக்கு இந்த தொடரில் என்ன மாதிரி ரோல் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.