தெருவில் பலூன் விற்று வந்த இளம் பெண் ஒருவருக்கு ஒரே இரவில் மாடல் அழகியாக வலம் வர வாய்ப்பு கிடைச்சா நம்புவீங்களா ?

– Advertisement –


ஆமாம், கேரளாவில் கண்ணூர் பகுதியில் திருவிழா நடந்துள்ளது. அங்கு மக்கள் பலரும் கூடியிருந்தனர். பேண்டமிக்கால் நொந்து போன மக்களால் வழக்கத்திற்கு மாறான கூட்டம் தான்.

அங்கு பலூன் விற்ப்பதற்க்காக வந்த இளம் பெண்ணை பார்த்த பிரபல புகைப்பட கலைஞர் ஆன அர்ஜீன் கிருஷ்ணன். அவரை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.


அந்த பெண்ணிற்க்கு வழக்கத்திற்க்கு மாறான லைக்குகள் மற்றும் கமெண்டுகள் அர்ஜீன் பதிவுக்கு வந்தது. அவர் அசாமை சேர்ந்த கிஸ்பூ வயிற்று பிழைப்பிற்க்காக பலூன் விற்கிறார்.

அந்த பெண்ணிற்க்கான வரவேற்பைப் புரிந்து கொண்ட அர்ஜீன் அடுத்த நாள் கிஷ்பூவை தேடிச் சென்று அவரை போட்டோ ஷீட்டிற்க்காக அழைத்துள்ளார். அவரும் ஒத்துழைத்துள்ளார்.

– Advertisement –


கிஸ்பூவுக்கு கேரள பாரம்பரிய உடைகளையும், மாடர்ன் உடைகளையும் மேக்கப் ஆர்டிஸ்ட் ரம்மியா உடன் இணைந்து அர்ஜீன் அலங்கரித்து அழகு பார்த்து புகைப்படமாகவும் எடுத்துள்ளார்.

அழுக்கான உடையுடன் பார்த்த பலூன் விற்ற் பெண்ணை அழகான ஆடை அலங்காரத்துடன் பார்த்த இணைய வாசிகள் இன்னும் உற்சாக படுத்தி உள்ளனர்.


இதனால் அர்ஜீன் மற்றும் கிஸ்பூவுக்கு நல்ல பிராக்ட்டுகள் அடுத்தடுத்து கிடைத்து வருகிறதாம் சமூக வலைதளம் பலரது வாழ்க்கையை ஒரே இரவில் தலைகீழாக மாற்றிப் போட்டு விடுகிறது.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: