கனா காணும் காலங்கள் சீரியலில் ராகவி ரோலில் நடித்த ஹேமாவுக்கு இவ்ளோ பெரிய வளர்ந்த பொண்ணா என ரசிகர்கள் பலர அதிர்ச்சியில் உள்ளனர்.

– Advertisement –


கனா காணும் காலங்கள் கடந்த 2006 ஆம் ஆண்டு பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த காதல், நட்பு,ஆசைகள் என்பதைக் கதை களமாக கொண்டது.

இந்த தொடர் வெளிதாகி சேனலின் டி ஆர் பி எகுற வைத்தது எனலாம் . அதனை தொடர்ந்து பல சீசன்கள் வெளியாகின.

கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என பல கதைகள் வந்தாலும் நம்ம 90ஸ் கிட்ஸ்க்கு பிடித்த தொடர் அது தான் என்பது யாரும் மறுக்க முடியாது.

Kana Kaanum Kaalangal hema

இந்த நிலையில் தான் கனா காணும் காலங்கள் சீசன் 2 தொடர் வெளியாகும் எனவும் அதற்கான டீசரும் வெளிகாகி அதிக வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் முன்னாள் கனா காணும் காலங்கள் சீரியலில் ராகவி ரோலில் நடித்த ஹேமாவுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. குழந்தை நட்சத்திரமாக துவங்கி, தென்றல் ,சித்தி என பல சின்னத்திரை தொடர்களிலும், பூவே உனக்காக, ஜீ, என பல சினிமா படங்களிலும் நடித்துள்ளார்.

– Advertisement –


திருமணத்தை அடுத்து இவர் சில வருடங்களாகவே மீடியாவில் இருந்து விலகி இருக்கிறார். அவ்வபோது போட்டோக்கள் மட்டும் பதிவிட்டு வந்தார்.

கடந்த சில மாதங்களாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சினிமா பாடல்களுக்கு வாய் அசைத்து நடித்து பதிவு போட்டு வருகிறார்.

அவரை பின் தொடரும் ரசிகர்கள் பலரும் அட நம்ம கனா காணும் காலங்கள் ராகவியா இது இப்படி அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிட்டாங்க என விமர்சனம் செய்தனர்.

Kana Kaanum Kaalangal Hema Daughter

இந்த நிலையில் நீண்ட நாட்களாக ஹேமாவின் கணவர் மற்றும் குழந்தை புகைபடத்தை காண்பிக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இதற்காக அவரது மகளின் சில வீடியோ கிளிப்சை பதிவிட்டார் ஹேமா இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு இவ்ளோ வளர்ந்த மகளா இருக்காங்க என அதிர்ச்சி அடைந்து கேள்வி எழுப்பி உள்ளனர்.

– Advertisement –

Categorized in: