நடிகை கனிகாவை குறித்து ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட பயில்வான் ரங்கநாதனை செம விலாசு விலாசியுள்ளார் .

நடிகரும் பத்திரிக்கையாளரும் ஆன பயில்வான் ரங்கநாதன் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். அதிலும் குறிப்பாக இயக்குநர் பாக்கியராஜ் படங்களில் இவர் தொடர்ச்சியாக நடித்து இருப்பார் .

kaniha

இவர் சமீபத்தில் சினிமா வாய்ப்புகள் குறையவே யூடியூப் வீடியோவில் அதிகமாக நேர்காணல் கொடுத்து வருகிறார். அதிலும் பல நடிகர் நடிகைகளையும் அவர்கள் பர்சனல் உறவுகளையும் அலசி ஆராய்ந்து பேசி வருகிறார்.

அந்த வகையில் தான் நடிகை கனிகாவை குறித்தும் அவர் வெளியிட்ட வீடியோ செம பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட கனிகா இவர் பேசுவதை குறித்து புகார் அளிப்பது எப்படி, இவர் இப்படி போலியான பத்திரிக்கையாளராக இருக்கிறாரே. இவர் ஆபாசமாக பேசுவதை கேட்டு அப்படியே நம்பும் கூட்டமும் ஒரு பக்கம் இருப்பது மிகுந்த சோகத்தை ஏற்ப்படுத்துகிறது.

பொதுவால இது போன்ற விமர்சனங்களை பெரிதாக எடுத்து கொள்வது இல்லை, ஆனால் இவர் பேச்சு எனக்கு வயிறு வரை எரிகிறது என செம காட்டமாக பேசி உள்ளார் கனிகா.

Categorized in: