கடைகளில் பை தர பணம் வசூலிப்பது முதல் மீதி பணம் என எல்லாவற்றையும் குறித்து வாடிக்கையாளர்கள் அவர்களுக்காக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.

– Advertisement –


சிலருக்கு வழக்கின் பேரில் நியாயம் இருக்கும் பட்சத்தில் நல்ல தொகை நஷ்ட ஈடாக கிடைக்கும்.சிலர் வீணாக வழக்கு தொடர்ந்தால் அவர்களுக்கு சிக்கல் தான் வரும் .

அந்த வகையில் பெங்களூரில் வக்கீல் ஒருவர் ஹோட்டல் எம்பயர் உணவகத்தில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுள்ளார்.அதற்க்கு பில்லாக 265 ரூ வசூலிக்கபட்டதாம்.

ஆனால் பில்லில் 264.60 பைசா தான் அச்சிட பட்டிருந்த நிலையில் ஏமாற்றியதாக கோபபட்ட வக்கீல் அந்த பாக்கி 40 பைசாவை திரும்ப தருமாறுக் கேட்டுள்ளார்.

– Advertisement –


ஆனால் அந்த உணவகத்தினர் கொடுக்க திட்டவட்டமாக மறுத்து விட்டார்களாம் இதனால் அவர்கள் மீது கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்து உள்ளார்.

அவரது மன உளைச்சளுக்காக 1 ரூ மட்டுமே நஷ்ட ஈடாக கேட்டு இருந்த நிலையில் வழக்கு 8 மாதமாக நீடித்து வந்துள்ளது. இதனை அடுத்து கடந்த 4 ஆம் தேதி வந்த தீர்ப்பின் படி.

ஜி எஸ் டி சட்டத்தின் படி 50 பைசாவுக்கு உள்ளாக இருந்தால் அந்த தொகையை வாங்காமலும் 50 பைசாவுக்கு மேலாக இருந்தால் அதற்க்கு ரவுண்டப் செய்து வசூலிப்பதாகவும் உணவக தரப்பில் பதில் சொல்லபட்டது.

– Advertisement –


இந்த நிலையில் தேவையில்லாமல் கோர்ட்டின் நேரத்தை வீணடித்ததாக காண்டான ஜர்ஜ் அய்யா அவருக்கு 2000 ரூ அபராதமும், 2000 ரூ வழக்கு செலவிற்க்கு அடுத்த 30 நாட்களுக்குள் செலுத்த உத்தரவிட்டார்.

40 பைசாவுக்கு ஆசைப்பட்டு 4 ஆயிரம் ரூபாய்க்கு தானாகவே ஆப்பு வாங்கிக் கொண்ட வக்கீலுக்கு பலரும் அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: