நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ரக்ஷிதா விலகப்போவதாக வெளியான செய்தி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ அதில் முக்கிய லீட் மிர்ச்சி செந்தில் மற்றும் ரக்ஷிதா காம்போவில் நடித்து வருகின்றனர்.
சீரியல் என்றாலே ஒரு விஷயத்தை சவ்வாக இழுத்து எபிசோடை ஓட்டுவார்கள் ஆனாலும் இது ரொம்ப டூமச்சுடா அப்பா என ரசிகர்களே கதரும் அளவிற்க்கு கடைசி எபிசோடுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரக்ஷிதா சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சீரியலில் இருந்து அவசரமாக ரக்ஷிதா வெளியேற முக்கிய காரணமாக அவருக்கு கன்னட திரை உலகில் முக்கிய கேரக்டர்கள் கிடைத்ததால் தான் என அரசல் புரசலாக தகவலும் பரவி வருகிறது.