உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அனைவருக்கும் ஆசை தான் அதிலும் கட்சிதமாக அழகாக இருக்க வேண்டும் என அதற்க்கான முன்னெடுப்புகளை அதிகமாக எடுக்கும் தலைமுறை உருவாகி வருவது நல்லது.
ஆனால் அதுவே சதா காலமும் நினைவில் இருப்பதனால் இயல்பான வாழ்க்கைக்கு தொந்தரவாக அமைந்து விடுகிறது, சரியான சாப்பாடு எடுத்து கொள்ளாமல் டயட்டில் இருந்து கொண்டு சாப்பாட்டிற்க்காக ஏங்குபவர்களும் உண்டு.

அந்த வகையில் பிட்னஸ் போதை நாடி நரம்பு என எல்லாவற்றிலும் தலைக்கேறின ஒருவரால் தான் திருமண கோலத்தில் கூட புஸ் அப் எடுக்க முடியும் .
அப்படி திருமண கோலத்தில் அன்னா அரோரா என்ற இளம் பெண் சாதரணமாக பெண்கள் நடக்கவே தடுமாறும் எடையை கொண்ட உடையான லெஹெங்காவை அணிந்தும்,
மணக்கோலத்தில் பெண் அணியும் நகைகளையும், அலங்காரத்தையும் செய்து கொண்டு புஸ் அப் எடுக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள் அவரது திறமைக்கும், ஆர்வத்திற்க்கும் வாழ்த்து தெரிவித்து வருவதுடன் அவரது கோலம் சாதரண போட்டோ ஷூட்டாக இல்லாமல் உண்மையான திருமணமாக இருக்குமானல் அதற்க்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.