சினிமாவில் வந்தாலும் சரி நேரில் வந்தாலும் சரி பாம்பு என்றால் எல்லாருக்குமே பீதி தான் ஒருபக்கம் தெய்வமாக பார்க்கபட்டாலும் ,
மற்றொரு பக்கம் அதன் விசத்தன்மை உயிரையே கொல்லக்கூடிய அளவிற்க்கு கொடுமையான என்பதால் பலர் அதற்க்கு பயப்படுவது சகஜம் தான்.
ஆனால் குடி போதை ஆசாமி ஒருவர் தன்னை கடித்த பாம்பை துண்டு துண்டுகளாக கடித்து துப்பிய பின்னர் பரிதாபமாக இறந்து போன சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பீகார் மாநிலத்தின் சிறு கிராமத்தில் ராம் மாட்டூ என்ற 60 வயது மதிக்க தக்க வயதானவர் சம்பவத்தன்று போதை தலைக்கேற குடித்துள்ளார்.
குடி போதையில் வீட்டின் அருகில் இருந்த மரத்திற்க்கு அருகில் இயற்கை உபாதைக்காக சென்ற ராமை சிறிய பாம்பு ஒன்று தீண்டியுள்ளது.
இதனால் துடுத்துப் போன ராம் மாட்டூ கோவத்தின் உச்சத்தில் அந்த பாம்பினை பிடித்து கடுப்பில் கண்டம் துண்டமாக கடித்து துப்பியுள்ளார்.

இதனை பார்த்து பதைத்துப் போன குடும்பத்தினர் அவரை மருத்துவ மனைக்கு அழைத்து செல்ல முயன்ற போது அதனை ஏற்க்காத ராம் சின்ன பாம்புதான் விஷம் இருக்காது என தட்டிக் கழித்துள்ளார்.
குடும்பத்தினரும் கண்டுக்கொள்ளாமல் விட இரவு தூங்க சென்ற ராம் காலையில் எழுந்துக்காமல் கிடக்க சந்தேக மடைந்த குடும்பத்தினர் அவரைச் சோதிக்க,
அவர் இறந்து கிடந்ததைப் பார்த்து குடும்பத்தினர் அதிர்ந்து போயுள்ளனர் மேலும் அவரது இழப்பு அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.