நடிகை ஸ்ரீவித்யா தென்னிந்திய சினிமாவில் சகாப்தங்களை கொண்டவர் அவர் மரணம் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை ஸ்ரீவித்யா தமிழில் நடிகர் திலகம் சிவாஜியின் திருவருட் செல்வர் படம் மூலமாக அறிமுகமாகி சூப்பர் ஸ்டாரின் முதல்படமான அபூர்வ ராகத்தில் கதாநாயகி ஆனார்.

Srividhya

அவருக்கும் உடன் நடித்த கமல் ஹாசனுக்கும் ஆன காதல் அனைவரும் அறிந்தது தான். அந்த மன அழுத்தத்தில் இருந்து வெளி வர நினைத்த ஸ்ரீவித்யா.

அவருடன் பணியாற்றிய இயக்குநரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பின்பு அவரும் தனது சொத்துக்காக கொடுமை படுத்தியதால் உடனடியாக விவாகரத்து பெற்றார்.

பின்பு, தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்திய ஸ்ரீ வித்யா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வந்தார்.

பின்பு 2003 ல் மார்பக புற்ரூ நோயால் பாதிக்கப்பட்ட அவர் 3 வருட வேதனை மிகுந்த போராட்டத்திற்க்கு பின்பு பரிதாபமாக உயிரிழந்தார்.

அவர் கேரளாவுக்கு குடியேறி தொடர்ந்து பல மலையாள சீரியலில் பணியாற்றிய போது, அவர் இசை பள்ளியை துவங்க ஆசைப்பட்டு இருக்கிறார்.

அப்போதைய நடிகரும் முதலமைச்சருமாக இருந்த கே.பி கணேஸ் குமார் உடன் இணைந்து அறக்கட்டளை ஒன்றை நிறுவியுள்ளார்.

மரண தருவாயில், ஸ்ரீவித்யா தாங்க முடியாத வேதனையை அனுபவித்ததாகவும், அவர் வலி நிவாரணிக்காக மருந்து பெறக்கூட பணம் இல்லாமல் தவித்ததாகவும்,

அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் சுய சரிதை மூலமாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் கே.பி கணேஷ் குமார் ஸ்ரீவித்யா தனக்கு தேவையான மருந்துகளை வாங்க பணம் இல்லாமல் தவித்த போது,

அந்த அறக்கட்டளை மூலமாக பணம் கேட்ட போது பணம் கொடுக்காமல் அவரை ஏமாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மருத்துவர் கிருஷ்ணர் நாயக்கரின் சுய சரிதை மூலமாக தமிழ் சினிமாவின் ஆளுமையின் மரணம் எவ்வளவு அவலமாக நிகழ்ந்து உள்ளது என தெரிய வந்துள்ளது.

Categorized in: