நடிகரும், இசை அமைப்பாளரும் ஆன விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளமான டிவிட்டரில் போட்ட டிவீட் தற்போது சர்ச்சையை கிளப்பியது.

vijay Antony

விஜய் ஆண்டனி டிவிட்டரில், இந்த லாக்டவுன் பணக்காரனை மேலும் பணக்காரனாகவும், ஏழையை பிச்சைக் காரனாகவும் மாற்றி வருகிறது.

இதற்கு பதிலாக, ஹிரோசிமா வில் போட்டது போல ஒரே ஒரு பாம் போட்டு உலகத்தையே மொத்தமாக அழித்து விடுங்க என அவர் போட்ட டிவீட் வைரல் ஆகிவருகிறது.

vijay antony Tweet

தமிழகத்தில் கடந்த 2020 துவங்கி கொரானா, ஒமைக்கிரான் என உருமாறிய வைரஸ் தொற்று அதிகமாக பரவி வரும் காரணத்தினால்,

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நாடுத் தழுவிய ஊரடங்கு கட்டுபாடுகளுடன் கடந்த 6 ஆம் தேதி முதல் அமலில் உள்ளது.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி போட்ட டிவீட் அவர் பொது மக்களின் நிலை குறித்து வேதனைப் படுவதை வெளிக்காட்டும் விதமாகவும்,

அன்றாட செலவுக்கு அல்லாடும் பாமர மக்களின் குரலாகவும் பார்க்கபடுவதாக சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகர் விஜய்ஆண்டனி பல வெற்றிப் படங்களை கொடுத்த நிலையில், தற்போது மழை பிடிக்காத மனிதன், தமிழரசன், கொலை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

மூடர் கூடம் நவின் இயக்கத்தில் அருண் விஜய், அக்‌ஷரா ஹாசன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலருடன் அக்கினி சிறகுகள் படத்தில் கமிட் ஆகியுள்ளார் மேலும் இந்த ஆண்டில் படம் ரிலீசாகும் என எதிர்ப் பார்க்கபடுகிறது.

Categorized in: