நடிகர் விஜய் தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்க்காக நேற்று நடந்த உள்ளாட்சி தேர்தலில் முதல் ஆளாக வாக்களிக்க வந்தார்.

– Advertisement –


அவரோடு அவர் ஓட்டி வந்த சிவப்பு நிற மாருதி காரும் பயங்கரமாக ட்ரெண்டானது. சென்ற தேர்தலின் போது விஜய் ஓட்டி வந்த சைக்கிளுக்கு கிடைத்த அதே மவுசு மாருதிக்கும் கிடைத்தது.

அவரது சைக்கிளின் நிறத்தை வைத்து அவர் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறாரா என சர்ச்சை கிளப்பபட்டது போல அதே சர்ச்சை அவரது காருக்கும் கிளம்பியது.

Vijay Vote

இந்த நிலையில் தான் தளபதி விஜய் ஓட்டி வந்து உலக ட்ரெண்டான மாருதி காருக்கு இன்சுயூரன்ஸ் முடிந்து 2 ஆண்டுகளுக்க்ய் மேல் ஆகிவிட்டதாம்.

விஜய் ஜோசப். சி என்ற பெயரில் பதிவாகி உள்ள அவரது சிவப்பு நிற மாருதி காரின் இன்சூரன்ஸ் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்து விட்டது.

– Advertisement –


சட்டபடி இன்சியூரன்ஸ் முடிந்த காரை ஓடுவது குற்றம். இதனால் விஜய் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக இணையத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Vijay

மேலும் கடந்த ஆண்டில் தான் அவர் பயன்படுத்தும் சொகுசு காருக்கான வரி ஏய்ப்பு செய்த விவகாரம் பூதாகாரம் ஆனது. அதற்காக அவர் நீதிமன்றம் வரை செய்து எச்சரிக்கபட்டதும் குறிப்பிடதக்கது.

இதற்கிடையே மீண்டும் அவரது அடுத்த காருக்கான விவகாரம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதே சமயம் இது விஷ கிருமிகள் பரவ விட்ட வதந்தியாக கூட இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

– Advertisement –

Categorized in: