கேரளாவில் கூலி தொழிலாளியாக இருந்த 60 வயதான மம்மிக்கா ஒரே ராத்திரியில் சூப்பர் மாடலாக மாற்றிய அதிசயம் நடந்துள்ளது.

– Advertisement –


கேரளாவின் கோழிக் கோட்டை சேர்ந்த 60 வயதான தினக்கூலி தொழிலாளியாக பிழைப்பு நடத்தி வந்தவர் மம்மிக்கா.

அந்த ஊரில் அழுக்கு லுங்கி கிழிந்த சட்டையுடன் சுற்றி திரிந்து வந்த மம்மிக்காவை பார்த்த பிரபல மாடலிங் போட்டோ கிராப்பர் ஷெரிக் வையாலி.

Mammika

அவரது தோற்றத்தை தாண்டி அவரது முகத்திற்க்கான மதிப்பை வைத்து அவரை பேசி மாடலிங் செய்ய ஒத்துக்க வைத்துள்ளார்.

பிறகு அவருக்கு ஸ்டைலாக முடி வெட்டி, பேசியல், மெடிக்கியூர், பெடிக்கியூர் என எல்லா பட்டி டிங்கரிங்கும் பார்த்து அவரை வேற லெவலாக மாற்றியுள்ளார் ஷெரிக்.

– Advertisement –


ஷெரிக் அவரை கோட்டு சூட் போட்டு மாசாகா ஸ்டைலாக நடக்க விட்டும் போஸ் கொடுக்க வைத்தும் ஷெரிக் எடுத்த போட்டோக்கள் தற்போது சோசியல் மீடியோவில் வைரல் ஆகி வருகிறது.

இதை பார்த்த பலரும் அவரது இந்த கூலி தொழிலாளி டூ சூப்பர் மாடலா என மாற்றத்தை பாராட்டி வருகின்றனர்.

– Advertisement –

Categorized in: