போலிஸ், டிஜிபி என சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருக்கும் பெண்களை குறிவைத்து திருமணம் செய்து மோசடி செய்த காதல் மன்னன் கைது.

– Advertisement –


ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரமேஸ் சந்திரா ஸ்வைன் என்பவர் மீது இளம் பெண் ஒருவர் திருமண மோசடி புகார் கொடுத்து இருந்த நிலையில் அவர் காவல் துறையினரால் தேடபட்டு வந்தார்.

பிறகு தீவிர விசாரணைக்கு பின்னர் தான் அவர் பெயரே உண்மையில்லை. அவருக்கு ரமேஷ் சந்திரா ஸ்வைன் போல் பிந்து பிரகாஷ், ரமணி ரஞ்சன் உள்ளிட்ட பல பெயர்கள் இருப்பது தெரியவந்தது.

54 வயதான அந்த மோசடி மன்மதன் தனது முதல் திருமணத்தை 1982 ல் செய்து கொண்டார். பின்னர் பஞ்சாப் மாநிலத்தில் மத்திய போலீசில் பணியாற்றும் ஒரு பெண்ணை ஏமாற்றி ரூ 10 லட்சம் மோசடி.

– Advertisement –


குருத்துவாரினை சேர்ந்த போலீஸ் டிஜிபியை ஏமாற்றி ரூ11 லட்சமும், 2006ம் ஆண்டு கேராளவில் 13 வங்கிகளை ஏமாற்றி சுமார் 1 கோடி கடன் வாங்கியதற்காக கைதாகியிருந்ததும் தெரியவந்துள்ளது.

இதுமட்டும் அல்லாமல் இவர் ஐதிராபாத்தில் ஒரு பெண்ணிற்கு மெடிக்கல் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ2 கோடியை ஏமாற்றியதும் அம்பலமானது.

இவர் ஏமாற்றிய 14 பெண்களின் 9 பெண்களை போலீசார் தொடர்பு கொண்டு புகார்களை பெற்றுக்கொண்டனர் மற்றவர்கள் சமூக அந்தஸ்து காரணமாகவும், பயம் காரணமாகவும் இவர் மீது புகார் கொடுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மேட்ரிமோனியல் சைட்டில் திருமணத்திற்க்காக பதிவு செய்துள்ள வயது முதிர்ந்த பெண்களை குறிவைத்தே இவர் மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

போலீசாரால் சுற்றி வளைத்து கைது செய்யபட்ட மன்மத தாத்தாவை போலீசார் கிடுக்குபிடி விசாரணை செய்து வருகின்றனர்.

– Advertisement –

Categorized in: