பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள முதல் 5 போட்டியாளர்களின் பெயர்கள் லீக் ஆனதாக தகவல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.
பிரபல தொலைக்காட்சி மற்றும் எண்டமோல் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் நிகழ்ச்சி தான் ‘பிக்பாஸ்’ சுமார் 100 நாட்கள் ஒரே வீட்டுக்குள் பல்வேறு டாஸ்க்குகள் மூலமாக தங்களை வெற்றிக்கான நபராக மெருகேற்றுவார்கள்.
இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில் கடைசியாக நடந்த நிகழ்ச்சியில் ஆரி வெற்றி பெற்றார், பாலாஜி முருகதாஸ் ரன்னர் அப் ஆனார் என்பது அனைவரும் அறிந்தது தான்.
தற்போது பிக் பாஸ் சீசன் 5 வரும் செப்டம்பர் – அக்டோபரில் துவங்கும் என எதிர்ப்பார்க்க்படும் நிலையில் போட்டியாளர்களை நியமிக்கும் நேர்முகத் தேர்வு நடைப்பெற்று வருகிறதாம்.
பிரபல டிவி ஷோ ‘ குக் வித் கோமாளி ‘ மூலமாக மக்கள் மத்தியில் செம்ம பிரபலமான கனி, சுனிதா,பாபா பாஸ்கர் மற்றும் வனிதாவுக்கே டப் கொடுத்த நடிகை ரம்மியா கிருஷ்ணன்.
சென்ற சீசனில் இருந்த சம்யுக்தாவின் நெருக்கமான தோழி பிரிதாயினி, ஜிபி முத்து, நடிகர் ஜான் விஜய் என பெரிய லிஸ்டே பேச்சு வார்த்தையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாக நிலையில் ஆணி தனமாக எதும் சொல்ல முடியாத நிலை தான்.