வட மாநில பெண் ஒருவர் 4 ஆண்களுடன் ஊரை விட்டு ஓடி அதில் யாரை கல்யாணம் செய்வது என குழப்பத்தில் சீட்டுப்போட்டு பார்த்த சம்பவம் கேட்பவரை திகைக்க வைத்துள்ளது.
உத்திர பிரதேச மாநிலத்தில் லக்னோவில் இளம் பெண் ஒருவர் தனது ஆண் நண்பர்கள் 4 பேருடன் ஊரை விட்டு ஓடியுள்ளார்.
இளம் பெண் காணாமல் போன நிலையில் பதறிய பெண்ணின் பெற்றோர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். மேலும் இளம் பெண் ஒருவரது வீட்டில் இருக்கும் தகவல் தெரிந்து வந்த பெற்றோர்.

பக்கத்துக் கிராமத்தில் இருந்த பெண்ணின் வீட்டிற்க்கு போய் நின்ற பெற்றோர் அவரை உடன் தங்க வைத்திருந்த நபரை பிடித்து லெப்ட் ரைட்டு வாங்கியதுடன், போலீசுக்கு போக துணிந்தவர்களை,
அப்படியே பசப்பி ஊர் பஞ்சாயத்துல நிறுத்த அந்த பெண் யாரை கல்யாணம் பண்ண விரும்புவதாக கேட்டனராம், ஆனால் அந்த இளம் பெண் யாரை கல்யாணம் செய்வது என குழப்பத்தில் இருப்பதாக பதில் அளித்துள்ளார்.
இதனால் மிரண்டுப் போன ஊர் பஞ்சாயத்து தலைவர்கள் என்ன செய்வது என தெரியாமல் , அந்த 4 ஆண் நண்பர்களையும் கேட்க பதறியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் வடிவேலு படத்தில் வரும் காட்சிப்போல எல்லோரது பெயரையும் எழுதி குலுக்கிப் போட்டு ஒரு நபரை தேர்ந்து எடுத்து அவரை திருமணம் செய்துக் கொள்ள வைத்துள்ளனர்.
இறுதியில் அந்த 4 பேரில் ஒருவரை மட்டுமே திருமணம் செய்துக் கொண்ட அந்த பெண் அவருடன் வாழ்க்கையை துவங்க உள்ளாராம்.