தன்னை காதலித்து ஏமாற்றி விட்ட காதலனை பழிவாங்க காதலி செய்த காரியம் உலக நாடுகளை நடுங்க வைத்து உள்ளது எனலாம்.
– Advertisement –
ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த 31 வயதான சாரா ஓபி என்ற ஆண் நண்பரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.இருவரும்.சந்தோஷமாக தனிமையில் கழித்து வந்துள்ளானர்.
இந்த நிலையில் தான் காதலன் ஓபி மற்றும் சாரா இடையில் சிறு சிறு பிரச்சனைகள் அவ்வபோது தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது போலும்,
மேலும் ஓபிக்கு முன்னதாகவே மூன்றுக் குழந்தைகள் இருந்த நிலையில் அவர்களுக்குள் அதுவும் சில சிக்கல்களை ஏற்ப்படுத்தியதாக கூறப்பட்டது.
– Advertisement –
இதற்கிடையில் மூன்று வருடக் காதலை இருவரும் சமரசமாக பேசி முடித்து கொண்டு பிரிந்துவிட்டார்களாம்.அடுத்த காதலியை ஓபி தேடி வந்தாராம்.
புதிய காதலி கிடைத்த நிலையில் அவருடன் ஊரை உல்லாசமாக சுற்றி வந்த ஓபியை குறித்து கேள்விப்பட்ட சாரா மனம் உடைந்து போயுள்ளார்.
பிறகு தன்னை காதலித்து ஏமாற்றிய காதலனுக்கும் அவரது புதிய காதலிக்கும் பாடம் புகட்ட நினைத்த சாரா அவரது வீட்டிற்கு பெட்ரோலுடன் சென்றுள்ளார்.
ஓபி மற்றும் புதிய காதலி ,அவரது குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் வீட்டிற்க்குள் இருந்துள்ளனர் அப்போது பெட்ரோலை வீட்டின் மீது ஊற்றிய சாரா.
– Advertisement –
அவர்களை வீட்டோடு சேர்த்து கொளுத்தி உள்ளார். பிறகு அந்த பெண் மற்றும் குழந்தைகள் எப்படியோ தப்பித்து ஓடி சென்றுவிட,சாராவும் அவரது காதலனும் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
காதல் கண்ணை மறைத்து இந்த இளம் பெண் காதலனை பழவாங்க சென்று பிறகு தானே பலியான சம்பவம் பெரும் சோகத்தை அந்த பகுதிமக்களிடையே ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.