ஆப்பிரிக்க இளைஞர் ஒருவர் இரட்டையர்கள் போல ஒரே மாதிரி பிறந்த மூன்று பெண்களை காதலித்து தற்போது திருமணம் செய்துகொள்ள காட்சிகள் காண்பவரை பிரம்மிக்க வைத்துள்ளது.

– Advertisement –


ஆப்பிரிக்காசுன் தென் பகுதியான காங்கோ நாட்டைச் சேர்ந்தவர் லுவிசோ, இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நட்டாலி என்ற பெண்ணை சந்தித்துள்ளார். நட்டாலியுடன் நட்பு காதலாக துளிர் விட ஆரம்பித்துள்ளது.

அப்பொழுது நட்டாலி லுவிசோவை அவரது சகோதரிகள் நடாகே மற்றும் நாடாஷா ஆகியோருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். மிரண்டுப் போன லூவிக்கு அப்போது தான் தெரிய வந்தது நட்டாலி, நடாகே மற்றும் நாடாஷா ஆகியோர் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் என்பது.

இவர்கள் சிறு வயது முதல் ஒன்றாக பிறந்து, படித்து விளையாடி வளர்ந்த பெண்கள் அதனால் புதிதாக பார்ப்பவர்களுக்கு தலை சுற்றலே வந்து விடும்.

– Advertisement –


காலப்போக்கில் லூவிக்கு நடாலி உள்ளிட்ட மூவர் மேலும் காதல் ஆசை வந்திருக்கிறது ஆனால் இது குறித்து பேசினால் தன்னை நட்டாலி என்ன நினைப்பார் என தயங்கி இருக்கிறார்.

பிறகு அந்த மூன்று சகோதர்களே தாங்களாக முன் வந்து லூவியை காதலிப்பதாக பிரப்போஸ் செய்து இருக்கிறார்கள். இதனால் இன்ப அதிர்ச்சியானார் லூவி.

பிறகு அவர்கள் காதலை ஏற்றுக் கொண்ட லூவி நட்டாலி உள்ளிட்ட மூவரையும் திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்க்கு அவர்களது பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லையாம்.


இருந்தாலும் வயசு கோளாறில் அதனைப் பொருட் படுத்தாத லூவி அவர் மூன்று காதலியையும் ஒரே மேடையில் ஒரே நேரத்தில் திருமணம் செய்துள்ளார்.

மூன்று கல்யாணப் பெண்களுடன் லூவி செல்வதைக் கண்ட அந்த பகுதி மக்கள் சொல்வது அறியாமல் திகைத்து நின்றார்கள். பலர் அவரை வாழ்த்தி சத்தம் எழுப்புகிறார்கள்.

இது குறுத்து பேசித நடாலி நாங்கள் பிறந்தது முதலாக எல்லாவற்றையும் ஒன்றாக சமமாக பகிர்ந்து உபயோகித்து வாழ்ந்து வருகிறோம் அது போல கணவரும் அமைவது சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: