ஸ்பெயின் நாட்டில் இளைஞர் ஒருவரது உணவில் செத்த எலியின் கண்கள் கிடந்த போட்டோ வெளிதாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் நாட்டை பொருத்த வரை சூப்பர் மார்க்கெட்டில் உறைந்த காய்கறிகள் மற்றும் இறைச்சிகளை வாங்கி சமைப்பது தான் தற்போதைய லைப் ஸ்டைலாக உள்ளது.

அந்த வகையில் பிரபல சூப்பர் மார்க்கெட்டில் இருந்து உறைந்த காய்கறிகளை வாங்கிய ஜீவான் ஜோஸ் என்ற இளைஞர் அதை வீட்டிற்கு சென்று சமைத்துள்ளார்.

சமையல் முடிந்து அதை சாப்பிட்ட ஜோஸ்க்கு ஆரம்பத்தில் முள் கோஸ் என்ற உணவு பொருள் என நினைத்து சாப்பிட துவங்கினாலும்,

சிறிது நேரத்திலேயே வாயில் அசவுகரியமான ஏதோ பொருளை சாப்பிடுவது போல உணர்வு ஏற்ப்பட்டுள்ளது.

பின்புதான் அவர் உணவில் இறந்த எலியின் தலை இருப்பதைக் கண்டு திடுக்கிட்டுள்ளார்.மேலும் அதன் ஒரு பகுதியை சாப்பிட்டதை நினைத்து முகம் வெளிறி போகவே,

உடனடியாக சம்மந்தபட்ட சூப்பர் மார்கெட்டிற்க்கு தெரியப் படுத்தியதுடன் அவர்கள் மீது வழக்கு தொடரவுள்ளாதாக தெரிவித்துள்ளார் ஜீவான் ஜோஸ்.

Categorized in: