வளர்ப்பு நாய்க்கு சொந்த மகளாக நினைத்து வளைகாப்பு செய்து 5 வகை சாப்பாடு போட்ட குடும்பத்தைப் பார்த்து அந்த பகுதி மக்கள் அசந்து போயுள்ளனர்.

– Advertisement –


சேலத்தை சேர்ந்த நடராஜன் அவரது வீட்டில் இரண்டு வளர்ப்பு நாய்களான சாரா மற்றும் ஹைடியை கடந்த சில மாதங்களாக மிக செல்லமாக வளர்த்து வந்துள்ளனர்.

அதில் பெண் நாய்க் குட்டி கர்ப்பமாக இருந்துள்ளது. முதல் நாள் முதலாக அதனை அதிக கவனத்துடன் நடராஜன் குடும்பத்தினர் பார்த்துக் கொண்டார்களாம்.

மேலும் வீட்டில் பெண்களுக்கு வளைகாப்பு செய்வதுப் போலவே செம மாசாக ஊரையே கூட்டி அவர் வளைகாப்பு நடத்தி உள்ளார்கள்.

– Advertisement –


நடராஜன் வளர்ப்பு நாய் சாராவுக்கு பத்திரிக்கை அடித்து அக்கம் பக்கத்தினரை வரவழைத்து, கண்ணாடி வளையல் அணிவித்து.

மஞ்சள் ,குங்குமம் ,சந்தனம் எல்லாம் தடவி நலங்கு வைத்து வளைகாப்பு வந்தவர்களுக்கு 5 வகை சாப்பாடு போட்டு அசத்தியுள்ளனர்.

வளைகாப்பு க்கு வந்த அத்துனை பேரும் சாராவுக்கு ஆரோக்கியமான பிள்ளைப்பேறு நடக்க மனதார வாழ்த்தி சென்றனர்.

– Advertisement –


மேலும் விழாவிற்க்கு வந்த அத்துனை மக்களுக்கும் மஞ்சள், குங்குமம், உள்ளிட்ட பரிசு பையை கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: