நடிகை சமந்தா தனது காதல் கணவர் நாக சைதன்யாவுடன் மீண்டும் இணைந்து வாழ ஆசைப்படுகிறாரா என்ற கேள்விக்கு ஏற்றபடி ஒரு காரியத்தை செய்துள்ளார்.
நடிகை சமந்தா – நாக சைதன்யா திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் நடை பெற்ற காதல் திருமணம். திருமணத்திற்க்கு பிறகு பிறகு சமந்தா நடிக்க மாட்டார் என கூறபட்ட நிலையில், அதற்க்கு பின் தான் சவாலான ரோலில் கலக்கினார்.
பேமலி மேன் 2, சூப்பர் டீலக்ஸ், என அவர் அடுத்தடுத்து அசாதாரண ரோல்களில் களம் இறங்கி கலக்கினார். இதனால் பல சர்ச்சை குடும்பத்திற்க்குள்ளாக கிளம்பியதாக கூறப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
இதனை அடுத்து தான் சமந்தா புஷ்பா படத்தில் ஐட்டம் சாங்கில் இறங்கி ஆட்டம் போட்டு ரசிகர்களை கிறங்கடித்தார். இதற்கிடையே, விவாகரத்து பெற்ற சமந்தா ஆன்மீக பயணத்தில் கவனம் செலுத்தினார். பூஜை பரிகாரம் என பிசியாக இருந்தார்.
இதனை அடுத்து சமீபத்தில் பேசிய சமந்தா நண்பர்கள் உதவியினால் தான் சீக்கிரமாக தன்னுடைய மன உளைச்சல் இருந்து மீண்டதாக தெரிவித்தார்.
மேலும் 3 மாதங்களுக்கு பிறகு பேட்டி ஒன்றில் இது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார் நாக சைதன்னியா. மனைவி சமந்தா சந்தோஷம் தான் முக்கியம் அவர் சந்தோசமாக இருந்தால் தானும் மகிழ்ச்சியாக இருப்பேன் எனவும், இருவருடைய தனிப்பட்ட சந்தோசத்தை மனதில் வைத்து கொண்டு தான் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாக சைதன்யா வை பிரிவதாக அறிவித்த பதிவை நீக்கியுள்ளர்.
இதனை பார்த்த நெடிசன்கல் பலரும் சமந்தா நாக சைதன்யா உடன் இணைய விரும்புகிறார் போல என கருத்து தெரிவித்து வருகின்றனர்.