கொரானா தொற்று காலத்தில் தான் மனதி நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டிய அவசியத்தை தற்போதைய சமூகம் கண்கூடாக பார்த்து வருகிறது எனலாம்.

முன் பின் தெரியாத நபருக்கும் உதவும் மனப்பான்மை தற்போது வளர்ந்து வரும் அதே நேரத்தில் மனித தன்மையில்லாமல் சிலரது செயல்பாடுகளும் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளது.

அந்த வகையில், இறந்த முதியவர் சடலத்தை பிரிட்ஜில் வைத்து இருந்த சம்பவம் வெளியாகி அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் பாலையா என்ற 90 வயது ஆன முதியவர் பேராசிரியராக வேலைப் பார்த்து ஓய்வு பெற்றவர். அவரின் மகள் மற்றும் மனைவி சமீபத்தில் இறந்த நிலையில் ஒரே பேரன் மட்டும் உடன் இருந்துள்ளார்.

பேரனுக்கு எந்த வருமானமும் இல்லாததால் அவரும் தாத்தா பாலையாவின் பென்ஷனில் தான் வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளார்.ஒரு கட்டத்தில்அவர் உடல் நிலை மோசமாக இருந்த காரணத்தினால் அவரை சரியாக பராமரிக்க முடியாமல் போனது.

நோய் முற்றியதால் இறந்த பாலையாவின் உடலை அடக்கம் பண்ண கையில் பணம் இல்லாத காரணத்தால் பேரன் புதைக்காமல் வீட்டிலேயே வைத்து இருந்திருக்கிறார்.

அளவுக்கு அதிகமான நாற்றம் வரவே அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து போலீசில் புகார் அளித்துள்ளனர். உடனே விரைந்து வந்த வீட்டில் ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது அங்கிருந்த பிரிட்ஜில் அழுகிய நிலையில் பாலையா வின் உடல் கிடந்ததை பார்த்து அதிர்ந்து போன போலீசார் பேரனை பிடித்து விசாரித்த நிலையில் உண்மை வெளியாகியுள்ளது.

Categorized in: