ஆந்திராவில் இளம் பெண் ஒருவர் இறந்த நிலையில் அவரது சடலத்துடன் 4 நாட்களாக தூங்கி வந்த மன நலம் பாதிக்கப்பட்ட மகன் துர்நாற்றம் வீசியதால் வெளியான உண்மை.
– Advertisement –
ஆந்திராவில் திருப்பதில் வசித்து வரும் ராஜலட்சுமி வயது 41 பட்டபடிப்பை முடித்து உதவி பேராசியராக பணியாற்றி வந்துள்ளார்.
மேலும் பிரபல பல்கலைக்கழகத்தில் பி எச் டி பட்டம் பெற படிப்பை முடித்து விட்டு காத்து இருந்துள்ளார்.அவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும் உள்ளார்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுப்பாடு காரணமாக மன நலம் குறைவுள்ள 10 வயது மகன் ஒருவருடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கபட்ட நிலையில் இருந்த ராஜலட்சுமி தூங்கி எழுந்த போது திடீரென தலை சுற்றியுள்ளது.
– Advertisement –
இதனால் நிலைத் தடுமாறி கீழே விழுந்த ராஜலட்சுமி தலையில் பலமாக அடிப்பட்டு இரத்தம் வேகமாக வெளியேறியதள் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அறியாமல் தூங்கி எழுந்து வந்த மகன் அம்மா தூங்குவதாக நினைத்து அவரை தொந்தரவு செய்யாமல் அவரை தூங்க விட்டு சென்றுள்ளார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ராஜலட்சுமி எங்கே என மகனிடம் கேட்டபோது அவர் தூங்குவதாக கூறி இருக்கிறான்.
4 நாட்களாகியும் ராஜலட்சுமி வெளியில் வராத நிலையில் சந்தேக மடைந்தவர்கள் திடீர் என வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்த நிலையில் அவரது தம்பிக்கு கால் பண்ணி சொல்லியுள்ளார்கள்.
சம்பவ இடத்திற்கு வந்த அவரது தம்பி போலிசார் க்கு தகவல் தெரிவிக்க போலீசார் பிரேதத்தை அழுகிய நிலையில் கைப்பற்றி உடற் கூறாய்வு செய்துள்ளனர்.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.