பழங்களில் மாம்பழம் என்றால் சிறியவர் முதல் முதியவர் வரை எல்லாருக்குமே பிடிக்கும் இல்லையா ? சேலத்து மாம்பழம், பங்கணபள்ளி, நீலம் என பல வகை மாம்பழங்கள் கிடைக்கிறது.
– Advertisement –
மாம்பழத்தின் சுவை மற்றும் நிறம் எல்லாம் அந்ததந்த விளை நிலத்தை அதாவது ஊரை சேர்ந்தது எனலாம்.அந்த வகையில் புதிய வகை மாம்பழம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகியுள்ளது.
ஆந்திராவில் கோதாவரி மாவட்டம் பகுதி யை சேர்ந்த சிறிய பெட்டிக்கடை வியாபாரி அன்றாடம் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அருகில் இருந்த கோழி முட்டை பண்ணைக்கு சென்று அன்றைக்கான வியாபாரத்திற்க்கு எடுத்து வந்துள்ளார்.
– Advertisement –
அப்போது கடைக்கு வந்த பின்னர் தான் அந்த வியாபாரி ஒரு முக்கியமான விஷயத்தை கவனித்து இருக்கிறார்.அது தான் இப்போது அதிகமாக வைரல் ஆகும் விஷயமும் கூட.
அந்த முட்டைகளில் எல்லாம் சரியாக இருக்க ஒன்று மட்டும் மாங்காய்ப் போல வடிவத்தில் இருந்துள்ளது. இதனை பார்த்து அந்த வியாபாரி அசந்து போனார்.
பிறகு கடையில் இருந்த ஒரு மாங்காயோடு அந்த வெள்ளை நிற முட்டையை வைத்து புகைப்படம் எடுத்த வியாபாரி தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டார்.
– Advertisement –
பார்ப்பதற்க்கு வெள்ளை நிற மாங்காய் போல காட்சி அளித்த அந்த முட்டையை பலரும் அதிகமாக ஷேர் செய்து ஆச்சரியத்தில் கமெண்ட் அடித்தும் வருகின்றனர்.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.